"புதுச்சேரி அதிமுக அலுவலத்தில் ஓபிஎஸ் படம் கிழிப்பு" .. திமுகவின் B டீமாக செயல்படும் "ஓபிஎஸ்" - அன்பழகன்

புதுச்சேரி அதிமுக அலுவலத்தில் வைக்கப்பட்டிருந்த ஓபிஎஸ் படத்தை ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கிழித்தெறிந்தனர்.

"புதுச்சேரி அதிமுக அலுவலத்தில் ஓபிஎஸ் படம் கிழிப்பு" .. திமுகவின் B டீமாக செயல்படும் "ஓபிஎஸ்" - அன்பழகன்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டத்திற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி உப்பளம் பகுதியில் அமைந்துள்ள அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஓபிஎஸ் படத்தை மாநில நிர்வாகிகள் கிழித்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து ஓபிஎஸ்ஸுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், அதிமுகவிற்கு விரோதமாகவும், எதிராகவும் செயல்பட்டு வரும் ஓபிஎஸ், வைத்திலிங்கம் உள்ளிட்டவர்களின் செயலை புதுச்சேரி அதிமுக கண்டிப்பதாகவும், கட்சியை அழிக்க நினைக்கும் ஓபிஎஸ் உள்ளிட்டவர்களுக்கு மரண அடி அடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கட்சிக்கு எதிராக திமுகவின் B டீமாக செயல்படும் ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை கட்சியில் இருந்து  நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.