முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய ’உங்களில் ஒருவன்’ சுயசரிதை நூலின் முதல் பாகத்தை வெளியிட்டார் ராகுல்காந்தி.!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய 'உங்களில் ஒருவன்' சுயசரிதை நூலின் முதல் பாகத்தை  காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வெளியிட்டார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய ’உங்களில் ஒருவன்’ சுயசரிதை நூலின் முதல் பாகத்தை வெளியிட்டார் ராகுல்காந்தி.!!

1953 மார்ச் 1ம் தேதி அவர் பிறந்தது முதல் 1976ம் ஆண்டு வரையிலான  அவரது வாழ்க்கை வரலாற்றை ''உங்களில் ஒருவன்' புத்தகத்தில் தனது சுயசரிதையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார்.

'உங்களில் ஒருவன்' நூலில் அவரது பள்ளி, கல்லூரி படிப்பு காலம், இளமை காலம், அரசியல் ஆர்வம், முதல் அரசியல் பொதுக்கூட்டம், தமிழ் சினிமாவில் அவர் நடித்தது, திருமண வாழ்க்கை, மிசா காலத்தில் பட்ட கஷ்டங்கள் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் முதலமைச்சரின் உங்களில்  ஒருவன் என்ற  சுயசரிதை நூலின்  
முதல் பாகம் வெளியீட்டு விழா அமைச்சர் துரைமுருகன் தலைமையில்  சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. 

இந்த விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு  உங்களில் ஒருவன் புத்தகத்தின் முதல் பாகத்தை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை  அமைச்சர் துரை முருகன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் புத்தகம் வழங்கப்பட்டது.  

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பினராயி விஜயன், ஜம்மு -காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி,  கவிப்பேரரசு வைரமுத்து, நடிகர் சத்யராஜ், அமைச்சர்கள், எம்பிக்கள், திமுக தோழமை கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக வரவேற்புரை ஆற்றிய திமுக எம்.பி.கனிமொழி, விழாவிற்கு  வருகை தந்த  ராகுல், பினராயி உள்ளிட்ட தலைவர்களை வாழ்த்தி பேசினார்.