தமிழ்நாட்டில் படிபடியாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் பொதுமக்கள் நிம்மதி...

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு படிபடியாக குறைந்து வருவதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில்  படிபடியாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் பொதுமக்கள் நிம்மதி...

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து உச்சத்தில் இருந்த நிலையில், தற்போது தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் புதிதாக மேலும் 5 ஆயிரத்து 755 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 55 ஆயிரத்து 332 ஆக உயர்ந்துள்ளது. அதில் 23 லட்சத்து 75 ஆயிரத்து 963 பேர் குணமடைந்து விட்டதாக குறிப்பிட்டுள்ள சுகாதாரத்துறை, தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு ஒரே நாளில் 150 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும், இதுவரை 32 ஆயிரத்து 51 பேர் உயிரிழந்ததாகவும் கூறியுள்ளது.  

மேலும், தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 47ஆயிரத்து 318 ஆக சரிந்துள்ளது. கொரோனா 2-வது அலையில் சிக்கிய கோவை மாவட்டத்தில் புதிதாக 698  பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மேலும் 350 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.