மணல் கடத்தல்: வருவாய் துறையினர் மீது தொடர் தாக்குதலை கண்டித்து ஆர்பாட்டம்!  

மணல் கடத்தல்: வருவாய் துறையினர் மீது தொடர் தாக்குதலை கண்டித்து ஆர்பாட்டம்!  

திருச்சியில் மணல் கடத்தலை தடுக்கச் சென்ற வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வருவாய் ஆய்வாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மணல் கடத்தலை தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன் உள்ளிட்ட நான்கு பேர் கடுமையாக தாக்கி உள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும், குண்டாஸ் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் துறையூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வருவாய் அலுவலர்கள் உட்பட  50-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல, பிரபாகரன் மீது மணல் கடத்தும் கும்பல் தாக்குதல் நடத்தியதை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பெண்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டு தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் வணிகவரித்துறை அலுவலர்கள் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கையில் வலியுறுத்தி மாநில துணைத்தலைவர் தலைமையில் கருப்பு பட்டை அணிந்து அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

இந்நிலையில், நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரனை திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிக நீக்கம் செய்வதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!