பாஜகவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம்..அண்ணாமலை உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பு..!

கிருஷ்ணகிரி, தேனியில் பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!

பாஜகவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம்..அண்ணாமலை உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பு..!

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வாகனம் மீது காலணி வீசிய பாஜகவினரின் அராஜக செயலைக் கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் மாநகர பேருந்து நிலையம் முன்பாக திரண்ட திமுகவினர், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, பாஜகவினரின் அராஜகத்தைக் கண்டித்தும், மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராகவும் அவர் கோஷங்கள் எழுப்பினர். மேலும், அண்ணாமலையின் உருவ பொம்மையை செருப்பால் அடித்து தங்களது எதிர்ப்பைக் காட்டினர்.

தேனி பங்களாமேடு அருகே திரண்ட தேனி வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர், பாஜகவினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர். இதேபோல், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் திமுகவினர் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.