கெளரவ விரிவுரையாளர்கள் நியமனத்திற்கு அனுமதி...அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!

கெளரவ விரிவுரையாளர்கள் நியமனத்திற்கு அனுமதி...அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!

கௌரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்வதற்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.


2023-24ம் கல்வியாண்டில் 5 ஆயிரத்து 699 கௌரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்வதற்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.

இதையும் படிக்க : ஆட்கொணர்வு வழக்கு : அதிரடி வாதங்களை வைத்த செந்தில் பாலாஜி தரப்பு...அதிர்ந்துபோன அமலாக்கத்துறை!

அதன்படி, ஒரு கௌரவ விரிவுரையாளர்களுக்கு  மாதம் ஒன்றிற்கு 20 ஆயிரம் வீதம் 11 மாதங்களுக்கு 125 கோடியே 37 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம், பல்கலைக்கழக மானிய குழு நிர்ணயித்துள்ள கல்வி தகுதி மற்றும் பிற உரிய விதிகளின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.