மாநிலத்துக்குள்ளேயே விளை பொருட்கள் விளைவிக்கப்பட வேண்டும்…

வேளாண்துறை அமைச்சருடனான ஆலோசனைக்கு பிறகு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.  

 மாநிலத்துக்குள்ளேயே விளை பொருட்கள் விளைவிக்கப்பட வேண்டும்…

வேளாண்துறை அமைச்சருடனான ஆலோசனைக்கு பிறகு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.  

அப்போது பேசிய அவர், தமிழக முதல்வரின் வழிகாட்டுதலோடு விவசாய விலை பொருட்களை நியாயமான விலை நிர்ணயிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. உரம் உள்ளிட்ட பொருட்களுக்கு 15 விழுக்காடு ஜி.எஸ் டி வரி உள்ளது இதை ரத்து செய்ய வேண்டும் அல்லது 5 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்றார்.

குறிப்பாக மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். 100 நாள் வேலைவாய்ப்பை பயன்படுத்துகிறவர்களை விவசாய வேலைகளுக்கு பயன்படுத்த வேண்டும். தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்ற அரசு முன்வந்துள்ளது.  மாநிலத்துக்குள்ளேயே விளை பொருட்கள் விளைவிக்கப்பட்ட வேண்டும் அவற்றை சந்தை படுத்த தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தயாராக உள்ளது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது என்றார்.