தனியார் கேபிள் டி.வி. அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் தீ... சென்னை ஏழுகிணறு பகுதியில் பரபரப்பு...

சென்னை ஏழுக்கிணறு பகுதியில் தனியார் கேபிள் டி.வி அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 2 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீ பரவாமல் தடுத்து அணைத்தனர்.

தனியார் கேபிள் டி.வி. அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் தீ... சென்னை ஏழுகிணறு பகுதியில் பரபரப்பு...
சென்னை ஏழுக்கிணறு மிண்ட் அருகேயுள்ள செயின்ட் சே வியர் தெரு வில் அமைந்துள்ள கட்டிடத்தின் முதல் தளத்தில் செயல்பட்டு வரும் பூட்டியிருந்த கேபிள் டி. வி அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அலுவலகத்தில் இருந்து புகை வருவதைக் கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
 
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த எழுக்கிணறு, வண்ணாரப்பேட்டை தீயணைப்புத் துறையைச் சேர்ந்த 2 வாகனங்கள் அரைமணி நேரப் போராட்டத்திற்கு பின் தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனர். கேபிள் டி. வி. அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததாலும், தீ பரவாமல் விரைந்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாலும் யாருக்கும் எந்த விதமான காயமும் ஏற்படாமல் பெரும் விபத்து த விர்க்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக ஏழுக்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் உயர் மின் அழுத்தம் காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தகவல் தெரி வித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.