மத்திய சிறையில் தீக்குளிக்க முயன்ற கைதியால் பரபரப்பு...!

திருச்சி மத்திய சிறையில் ஒரு கைதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய சிறையில் தீக்குளிக்க முயன்ற கைதியால் பரபரப்பு...!

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் 110 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் உமாரமணன் என்ற இலங்கைத் தமிழர் கடந்த 7 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தொடர்ந்து பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தன்னை விடுவிக்கக் கோரியும், வழக்கை வெளியே இருந்தவாறு நடத்த அனுமதிக்கவும் அவர் தொடர்ந்து பல நாட்களாக கோரிக்கை வைத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோரிக்கையை வலியுறுத்தி சிறை வளாகத்திலேயே உமா ரமணன் தீக்குளித்தார்.

உடனடியாக அருகிலிருந்தோர் ஓடிச்சென்று போர்வையை போர்த்தி தீயை அணைத்தனர். தொடர்ந்து முகம் மற்றும் மார்புப்பகுதிகளில் காயம்பட்ட அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.