ஓட்டு கேட்டு வந்த பிரதமர், தற்போது ஒட்டு கேட்கிறார்!

தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்டு வந்த பிரதமர் மோடி, தற்போது ஒட்டு கேட்டு வருகிறார் என பெகாசஸ் விவகாரத்தை சுட்டிக்காட்டி தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கடுமையாக சாடியுள்ளார்.

பெகாசஸ் சாப்ட்வேர் மூலம் அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்களின் செல்போன் உரையாடல் ஒட்டுக் கேட்கப்பட்டதாக மத்திய அரசின் மீது குற்றம்சாட்டி, நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளும் நாளை முதல் ஒத்தி வைக்கப்பட்டன.

இந்த நிலையில், சென்னையில் மாற்று கட்சியினர் காங்கிரஸில் இணையும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்டு வந்த பிரதமர் மோடி, தற்போது ஒட்டு கேட்டு வருகிறார் என பெகாசஸ் விவகாரத்தை சுட்டிக்காட்டி தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கடுமையாக சாடியுள்ளார்.  மேலும் அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை இல்லை என்றும், தெரிவித்தார்.