பிரதமா் மோடி இன்று ஜாா்கண்ட் பயணம்...!

Published on

2 நாள் பயணமாக இன்று ஜாா்க்கண்ட் செல்லவுள்ள பிரதமா் மோடி சுமாா் 24 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளாா்.

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று ஜார்கண்ட் மாநிலத்திற்கு செல்லவுள்ளாா். பின்னா் நாளை காலை 9.30 மணியளவில், ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா நினைவு பூங்கா மற்றும் சுதந்திரப் போராட்ட அருங்காட்சியகத்திற்கு பிரதமர் மோடி செல்லவுள்ளார். அதனை தொடா்ந்து பிர்சா முண்டாவின் பிறந்த ஊரான உலிஹாட்டு கிராமத்துக்கு செல்லும் பிரதமர் மோடி, அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தவுள்ளார்.

தொடர்ந்து, 11.30 மணியளவில் மூன்றாவது ஜன்ஜாதியா கௌரவ் திவாஸ் - 2023 கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள பிரதமா் மோடி, ‘விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா’வை தொடங்கி வைப்பதோடு, சுமார் 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழங்குடிகள் வளா்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளாா்.

பிரதான மந்திரி கிசான் சம்மன் நிதியின் 15-வது தவணைத் தொகையான சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாயை வெளியிடவுள்ள பிரதமர் மோடி ஜார்க்கண்டில் பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com