நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு... மின்வெட்டு ஏற்படும் அபாயம்?

நிலக்கரி தட்டுபாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் மின்வெட்டு ஏற்படும் அபாயம்  ஏற்பட்டுள்ளது.

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு... மின்வெட்டு ஏற்படும் அபாயம்?

தூத்துக்குடியில் உள்ள அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையத்தில் ஐந்து அலகுகள் மூலம் ஆயிரத்து 50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

கடந்த வாரம் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக ஒரே நாளில் 5 அலகுகளும் நிறுத்தப்பட்டு மின் உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதனையடுத்து கப்பல்கள் மூலம் உடனடியாக நிலக்கரி கொண்டு வரப்பட்டு ஐந்து அலகுகளும் படிப்படியாக ஓடத் தொடங்கின.

இந்நிலையில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக ஒன்றாவது அலகை தவிர மற்ற நான்கு அலகுகளும் திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளதால் 840 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

நாள் ஒன்றுக்கு தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு 17ஆயிரம் முதல் 18 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. ஆனால் தற்போது கையிருப்பும் இல்லாமல் கப்பலில் நிலக்கரி போதிய அளவில் வராததால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய அரசு தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு பொதுமான அளவு நிலக்கரியை ஒதுக்காததே இதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. தொடர்ந்து மின் உற்பத்தி பாதிக்கப்பட்டால் மின் வெட்டு ஏற்படும் நிலை இருப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.