ஓபிஎஸ் நடத்திய மாநாட்டை விமர்சித்து அதிமுக சார்பில் போஸ்டர்...தாம்பரத்தில் பரபரப்பு!

ஓபிஎஸ் நடத்திய மாநாட்டை விமர்சித்து அதிமுக சார்பில் போஸ்டர்...தாம்பரத்தில் பரபரப்பு!
Published on: 
Updated on: 
1 min read

திருச்சியில் ஓபிஎஸ் மாநாடு நடத்திய நிலையில் சென்னை, தாம்பரத்தில் அதனை விமர்சிக்கும் விதமாக அதிமுக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரட்டை தலைமைகளாக இருந்து வந்த அதிமுக, நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் தற்போது செயல்பட்டு வருகிறது. இருப்பினும், விடாத ஓ.பன்னீர் செல்வம் உண்மையான அதிமுகவை தொண்டர்கள் தான் முடிவு செய்வார்கள் என்றுக்கூறி மாநாடு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, நேற்றைய தினம் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பாக, திருச்சியில் மாபெரும் மாநாடு நடைபெற்றது. 

இந்நிலையில் அந்த மாநாட்டை விமர்சிக்கும் விதமாக "நாய் அழுதாலும் நரி ஊளையிட்டாலும் இனி எங்கள் சிங்கத்தின் கர்ஜனையே" என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர் தாம்பரம் முழுவதும் அதிமுக சார்பில் ஒட்டப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com