சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்... அதிமுக தலைமை கழகத்தில் பரபரப்பு...

சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முன்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. 

சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்... அதிமுக தலைமை கழகத்தில் பரபரப்பு...
சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு சசிகலா அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் உடன் தொலைபேசியில் பேசி வருகிறார். அதிமுகவை மீட்டெடுப்பேன், அம்மாவின் நிர்வாகிகளை தொண்டர்களை நீக்கும் இரட்டை தலைமை தவறை உணர வேண்டும் என்று கூறி வருகிறார். சமீபத்தில் எம்ஜிஆர் என்னிடம் ஆலோசனை கேட்பார் என்று சசிகலா தெரிவித்தார்.
 
இது எம்ஜிஆர், அதிமுக அபிமானிகளிடத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது அதிமுக தலைமை அலுவலகம் சுற்றியுள்ள பகுதிகளில் சசிகலா ஆதரவு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.