அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை சர்ச்சை  : திண்டுக்கல்லில் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக போஸ்டர் !!

அதிமுகவின் ஒற்றை தலைமை சர்ச்சை நீடித்து வரும் நிலையில் திண்டுக்கல்லில்  ஓ.பி.எஸ்க்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை சர்ச்சை  : திண்டுக்கல்லில் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக போஸ்டர் !!

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என வலியுறுத்தியதை அடுத்து அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும்  இடையே மோதல் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இரண்டு பேரும் தனது ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தை பொருத்தவரை முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் எடப்பாடிக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று திண்டுக்கல் சுற்று வட்டார பகுதிகளில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.  திண்டுக்கல் பேருந்து நிலையம் எம்ஜிஆர் சிலை அருகே ஓபிஎஸ் ஆதரவு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது அதிமுக தொண்டர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.