முதுநிலை மருத்துவ தரவரிசைப் பட்டியல் வெளியீடு...!

முதுநிலை மருத்துவ தரவரிசைப் பட்டியல் வெளியீடு...!

முதுநிலை மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

விண்ணப்பங்கள் வரவேற்பு:

தமிழகத்தில் 23 அரசுக் கல்லூரிகளிலும், 16 சுயநிதிக் கல்லூரிகளிலும், 2 ஆயிரத்து 346 முதுநிலைப் பல் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் உள்ள நிலையில், முதுநிலை மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை வரவேற்கப்பட்டது.

இதையும் படிக்க: பிஎஃப்ஐ என்றால் என்ன? அது எப்படி நிறுவப்பட்டது? என்ன ஆபத்தான நோக்கத்துடன் இது செயல்படுகிறது? தெரிந்துகொள்வோம்.... !!!

தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர்:

இந்நிலையில் அனைத்து விண்ணப்பங்களும் சான்றிதழ்களும் பரிசீலனை செய்யப்பட்டு அதற்கான தரவரிசைப் பட்டியலை சென்னையில் இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், முதுநிலை மருத்துவ மேற்படிப்புக்கு அரசுக்கல்லூரிகளில் 6 ஆயிரத்து 893 விண்ணப்பங்களும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் 2 ஆயிரத்து 864 விண்ணப்பங்களும் தகுதி வாய்ந்தவை என தெரிவித்தார்.

இணையத்தில் நடைபெறும் கலந்தாய்வு:

இதேபோல்,  பல் மருத்துவப் படிப்புக்கு அரசுக்கல்லூரிகளில் 662 விண்ணப்பங்களும் நிர்வாக ஒதுக்கீட்டில் 310 விண்ணப்பங்களும் தகுதிவாய்ந்தவை எனவும் குறிப்பிட்ட அமைச்சர் மா. சுப்பிரமணியன், இதற்கான கலந்தாய்வு இணையத்தில் நடைபெறும் எனவும் விளக்கமளித்தார்.