போரூர் தீமிதி திருவிழா! 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிப்பு!

பிரசித்தியான போரூர் அமன் கோவிலில், ஆடி மாதத்தை ஒட்டி, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு, ஊர்வலம் மற்றும் தீமிதி திருவிழா கொண்டாடினர்.

போரூர் தீமிதி திருவிழா! 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிப்பு!

சென்னை ஐயப்பன்தாங்கலில் பழமை வாய்ந்த துர்க்கை அம்மன் கோவில் ம்கவும் பிரசித்தியானது. ஆண்டு தோறும் அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதம், இந்த கோவிலில் பல சிறப்பு பூஜைகளும், அலங்கார அபிஷேகங்களும் செய்து கோலாகலமாகக் கொண்டாடுவது வழக்கம்.

ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக், கொரோனா பரவல் காரணமாக ஆடி மாதத் திருவிழா கொண்டாடப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த ஆண்டு, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து ஆடி மாதம், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, சிறப்பு பூஜைகள், ஊர்வலம், கூழ வார்த்தல் மற்றும் தீமிதி போன்றவை திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது.

பக்தர்கள் அனைவரும் காப்புக் கட்டி, விரதம் இருந்து பால்குடம் ஏந்தியும், அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும், பூங்கரகத்துடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக ஆலயத்திற்க்கு வந்தனர்.

பின், ஆலயத்தின் முன்பு அமைக்கபட்டிருந்த அக்னி குண்டத்தில்  இறங்கி, தீ மிதித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். இந்த விழாவில் உள்ளூர் பக்தர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்ததது குறிப்பிடத்தக்கது. இறுதியாக அலங்கரிக்கபட்ட வாகனத்தில் துர்க்கை அம்மன் ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்துடன் காட்சியளித்தார்.