வானொலி நேயர்கள் அதிர்ச்சி  : பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண ஸ்வாமி காலமானார்  !!

பிரதமர் என்பதற்கு பதிலாக அன்னை இந்திரா காந்தி என்று மாற்றி செய்தி வாசித்து அனைவரது பாராட்டையும் பெற்றார். 

வானொலி நேயர்கள் அதிர்ச்சி  : பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண ஸ்வாமி காலமானார்  !!

தனித்துவ குரலுக்கு சொந்தக்காரரான பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண ஸ்வாமி மும்பையில் காலமானார். அவருக்கு வயது 87.

தனித்துவ குரல்

வானொலியில் ஒரு காலத்தில் அதிகாலையில் ஒலித்த ஆகாசவாணி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண ஸ்வாமி என்ற தனித்துவமான குரலுக்கு சொந்தக்காரரான இவர், மும்பையில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

முதல் தமிழ் செய்தி வாசிப்பாளர்

இந்திய வானொலியின் முதல் தமிழ் செய்தி வாசிப்பாளர் என்ற பெருமையை பெற்ற இவர்தான், முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் இறப்புச் செய்தியையும் வானொலியில் தெரியப்படுத்தினார். அப்போது, பிரதமர் என்பதற்கு பதிலாக அன்னை இந்திரா காந்தி என்று மாற்றி செய்தி வாசித்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.  

கலைமாமணி விருது

அகில இந்திய வானொலியில் 35 ஆண்டுகள் பணியாற்றி விடைபெற்ற சரோஜ் நாராயண ஸ்வாமி, பின்னர், தமிழ் படங்கள், ஆவணப் படங்கள் உள்ளிட்டவற்றிக்கு பின்னணி குரல் கொடுத்து வந்தார். ஒலிபரப்புத்துறையில் பெண்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த அவருக்கு, தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி பெருமைப்படுத்தியது. தனது தனித்துவமான குரலால் லட்சக்கணக்கான தமிழர்களை வசீகரித்த சரோஜ் நாராயண ஸ்வாமியின் மறைவு வானொலி நேயர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.