மக்கள் செல்வாக்கு அதிமுகவிற்கு அதிகரித்துள்ளது...இபிஎஸ்.!!

கொட நாட்டில் கொலை,கொள்ளை நடந்ததை கண்டு பிடித்ததே அதிமுக தான் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மக்கள் செல்வாக்கு அதிமுகவிற்கு அதிகரித்துள்ளது...இபிஎஸ்.!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கழக இனை ஒருங்கிணைப்பாளரும் முன்னால் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் .

இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகராட்சி நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் கூறுகையில்,

முதல்வர் ஸ்டாலின் நம் தொண்டர்கள் மீது பொய் வழக்குகளை போட்டு வருகிறார் என்றும் இதற்கு எல்லாம் பயந்தவர்கள் நாங்கள் அல்ல என கூறினார். 

கூட்டணி இல்லாமல் நிற்க திராணி இல்லாத கட்சி திமுக - தில்லு இருந்தால் காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் போன்ற கூட்டணி கட்சிகள் இல்லாமல் நின்று பாருங்கள். மக்கள் இடத்தில் இருந்து அவர்கள் கேட்க வேண்டியதை நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்து கேட்கிறோம் என்றார்.

மேலும் கொட நாட்டில் கொலை,கொள்ளை நடந்ததை கண்டு பிடித்ததே அதிமுக தான் என கூறிய அவர், முதல்வர் ஸ்டாலின் பொய் பேசி தப்பிக்க முடியாது, குற்றவாளிகளுக்கு என்றும் நாங்கள் துனை போக மாட்டோம் என்றார்.   

தொடர்ந்து பேசிய அவர், ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே திராவிட முன்னேற்றக் கழகம் என்ற தீய சக்தியை நாம் அழிக்க முடியும் என தெரிவித்தார்.