உலக போட்டோகிராபி தினத்தன்று, போட்டோகிராபர்கள் அமைதி பேரணி!!!

உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு, பொள்ளாச்சியைச் சேர்ந்த புகைப்பட கலைஞர்கள் சேர்து, சில கோரிக்கைகளுடன் அமைதி பேரணி நடத்தினர்.

உலக போட்டோகிராபி தினத்தன்று, போட்டோகிராபர்கள் அமைதி பேரணி!!!

183 வது உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சி புகைப்பட வீடியோ கலைஞர்கள் சங்கம் சார்பில் புகைப்பட மற்றும் வீடியோ கலைஞர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதி பேரணி நடைபெற்றது. பொள்ளாச்சியின், நகராட்சி அலுவலகம் முன்பு துவங்கி, மத்திய பேருந்து நிலையம், மாரக்கெட் ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

முகாம்களும் உதவிகளும்:

தொடர்ந்து தனியார் மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் அரசு மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டது. இதில், ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அமைதியாக நடந்த இந்த பேரணியில் ஒரு சில கோரிக்கைகள் புகைப்பட கலைஞர்களால் முன்வைக்கப்பட்டது.

உயிரை பணயம் வைப்பவர்கள் நாங்கள்!

இந்த பேரணி குறித்து பேசிய, புகைப்பட மற்றும் வீடியோ கலைஞர்களின் சங்கத்தலைவர், தனபால் பேசுகையில், ”அரசின் நல திட்டங்கள், விழாக்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் புகைப்பட கலைஞர்களின் பங்கு முக்கியமானது. சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் உயிரை பணயம் வைத்து நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

எங்களுக்கு எந்த சலுகையும் இல்லை!

ஆனால், அரசின் எந்த சலுகைகளும் புகைப்பட கலைஞர்களுக்கு கிடைப்பதில்லை. தேர்தல் காலங்களில் ஒளிப்பதிவு ஒப்பந்தங்களும் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. இனி, நேரடியாக புகைப்பட கலைஞர்கள் சங்கங்களுக்கு வழங்க வேண்டும்.” என  சங்கத்தலைவர் தனபால் கோரிக்கைகளை விடுத்தார்.

தனி நல வாரியம் அமைக்க வேண்டும்!

இறுதியாக, புகைப்படக் கலைஞர்களின் பல ஆண்டு கோரிக்கையான தனி நல வாரியம் அமைக்க, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புகைப்பட மற்றும் வீடியோ கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல ஆண்டுகளாக, தங்களுக்கென்று எந்த சலுகைகளும் வழங்கப்படாத நிலையில், தங்களுக்கு ஒரு சில சிறிய கோரிக்கைகள் மட்டுமே உள்லதாகவும், அதை நிரைவேற்றும் படியாக அமைதி பேரணி நடத்தியதும், மக்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.