அரசியல் காழ்ப்புணர்ச்சி தான் இதற்கு காரணம் - அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி..!

அரசியல் காழ்ப்புணர்ச்சி தான் இதற்கு காரணம் - அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி..!

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கேபிபி பாஸ்கருக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 26 லட்சம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றியுள்ளனர்.  

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள்:

பி.வேலுமணி. எம்.ஆர்.விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்ட சில முன்னாள் அதிமுக  எம்.எல்.ஏக்கள் வீடுகளில் அடுத்ததடுத்து வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகிய நிலையில், ஆகஸ்ட் 12 அன்று  முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ கே.பி.பி. பாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். 

மேலும் படிக்க: 5 மணி நேரத்துக்கும் மேலாக நீடிக்கும் சோதனை...வீட்டில் முகாமிட்ட முன்னாள் எம்.எல்.ஏக்கள்!

கே.பி.பி.பாஸ்கர்:

நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2011, 2016 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்று இரண்டு முறை அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கே.பி.பி.பாஸ்கர். இவர் நாமக்கல், மதுரை மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமாக 40 எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் உள்ளன. அதிமுக பொதுக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார். அதுமட்டுமின்றி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

12 மணி நேரம் சோதனை:

கே.பி.பி.பாஸ்கர், வருமானத்திற்கு அதிகமாக 4 கோடியே 72 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக புகார் வந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அவருக்கு சொந்தமான 30 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். ஆகஸ்ட் 12 அன்று காலை முதல் மாலை வரை தொடர்ந்து 12 மணிநேரம் சோதனை நடத்தினர்.

கைப்பற்றப்பட்டுள்ளவை:

இந்த சோதனையின் முடிவில், 26 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள், ஒரு கிலோ 680  கிராம் எடையுள்ள தங்க நகைகள், 6 கிலோ 625 கிராம் எடையுள்ள வெள்ளி பொருட்கள், 20 லட்சம் மதிப்புள்ள கிரிப்டோ கரன்சி முதலீடுகள், 4 சொகுசு கார்கள் மற்றும் வழக்கு தொடர்புடைய 214 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.1 கோடி மோசடி...! அதிமுக முன்னாள் கவுன்சிலர் கைது...!

அரசியல் காழ்ப்புணர்ச்சி:

கே.பி.பி.பாஸ்கர் இல்லத்தில் நடைபெற்ற சோதனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான  அதிமுகவை முடக்கவே இந்த சோதனை நடந்துள்ளதாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த சோதனை நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.