ஒரே நேரத்தில் ; ஒரே இடத்தில் வாக்கு சேகரித்த அரசியல் கட்சியினர்...!

ஒரே நேரத்தில் ; ஒரே இடத்தில் வாக்கு சேகரித்த அரசியல் கட்சியினர்...!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறவுள்ளதால் தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளருக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது திமுக கூட்டணி வேட்பாளரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் பெரிய மஸ்ஜித் பள்ளிவாசலில் வாக்கு சேகரித்தார்.

இதையும் படிக்க : ஆபத்தை உணராமல் படிக்கட்டில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்...!

இதேபோல், அதிமுக சார்பில் அவை தலைவர் தமிழ்மகன் உசேன், அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவு கோரி இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தனது வேட்பாளர் மேனகாவிற்கு விவசாயி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். ஒரே நேரத்தில் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி என அரசியல் கட்சியினர் ஒன்று கூடியதால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.