போதை ஆசாமிகளை கைது செய்யக்கோரி காவல் நிலையம் முற்றுகை..!

வியாபாரியை தாக்கிய போதை ஆசாமிகளை கைது செய்யக்கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட நாடார் சங்கம் மற்றும் வணிகர் சங்கம்

போதை ஆசாமிகளை கைது செய்யக்கோரி காவல் நிலையம் முற்றுகை..!

பணம் கேட்டு தராததால் வியாபாரியை தாக்கிய கஞ்சா போதை ஆசாமிகளை, கைது செய்யக்கோரி நாடார் சங்கம் மற்றும் வணிகர் சங்கத்தினர் பள்ளிக்கரணை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் மேடவாக்கம் ரங்கநாதபுரம் பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார்.  நேற்றிரவு பள்ளிக்கரணை காவல் நிலையம் பின்புறம் உள்ள குப்பைமேட்டில் பிளாஸ்டிக்  பொருட்களை சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது கஞ்சா போதையில் வந்த மூன்று பேர், ஆனந்தகுமாரை பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அவர் பணம் தர மறுத்ததால், அந்த மூன்று பேர் கத்தி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் அவரை கண்மூடிதனமாக தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த ஆனந்தகுமாருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.  பின்னர் இது குறித்து  பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். 

மேலும் தகவல் அறிந்த தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் பேரவை மற்றும் தமிழ்நாடு நாடார் சங்கத்தை சேர்ந்த சுமார் 70க்கும் மேற்பட்டோர் வியாபாரியை தாக்கிய போதை ஆசாமிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முற்றுகையிட்டனர். தொடர்ந்து பள்ளிக்கரணை காவல் நிலைய சரகத்தில் உள்ள வியாபாரிகள் தொடர்ந்து தாக்கப்படுவதாகவும் தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.