10-டன் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற வேன் பறிமுதல் - போலீசார் விசாரணை

10-டன் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற வேன் பறிமுதல் செய்யபட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வேனில் ரேஷன் அரிசியை கடத்தி வந்த வேன் ஓட்டுநர்கள் தப்பி ஓடியதால் வாகனத்தை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

உசிலம்பட்டி அருகே ரேஷன் அரிசி மூடைகளை வாகனங்களில் கடத்திச் செல்வதாக வட்டார வழங்கல் அலுவலருக்கு தகவல் தொிவிக்கப்பட்டது. தகவலின போில் சம்பவ இடத்திற்கு சென்ற வட்டார வழங்கல் அலுவலர் அவ்வழியாக வந்த வேனை நிறுத்தினா்.

இதனை சுதாரித்து கொண்ட  ஓட்டுநா்கள் வாகனத்தை அங்கே நிறுத்தி விட்டு தப்பித்து விட்டனா். அப்போது வேனை சோதனை செய்த போது  10-டன் ரேஷன் அரிசி இருப்பது தொியவந்தது.  இதனையெடுத்து வாகனத்தை பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். இச்சம்பவம் தொடா்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.