கடற்கரையில் நடைபயிற்சி செய்றீங்களா? அப்போ நீங்க இதை செய்யணும்...

மெரினாவில் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்களிடம் ட்ரோன் பயன்படுத்தி ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

கடற்கரையில் நடைபயிற்சி செய்றீங்களா?  அப்போ நீங்க  இதை செய்யணும்...

மெரினாவில் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்களிடம் ட்ரோன் பயன்படுத்தி ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

ஊரடங்கில் தளர்வு அளிக்கப் பட்டதையடுத்து, கடற்கரையில் மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, ஞாயிற்றுக் கிழமையான இன்று மக்கள் அதிகம் கூடும் இடமான மெரினா கடற்கரையில் ட்ரோன் மூலம் காவல்துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

சென்னை மாநகர காவல் ஆணையரின் உத்தரவையடுத்து, திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் ட்ரோன் பயன்படுத்தி கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு மணல் பரப்பில் செல்லும் வாகனத்தில் காவலர்கள் சென்று ஒலிபெருக்கி மூலம் முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஒவ்வொரு வாரமும் இதுபோல், ட்ரோன் மூலம் மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

வீட்டிலேயே இருந்த மக்கள் இந்த தளர்வுகளை பயன்படுத்தி கொண்டு  மெரினா கடற்கரைக்கு அதிகமாக வர தொடங்கியுள்ளனர். இதனால் மீண்டும் எளிதில் கொரோனா தொற்று ஏற்படவாய்ப்பு இருகிறது. எனவே மக்களுக்கு இதுபோன்று விழிப்புணர்வு செய்வது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.