விரக்தியின் உச்சத்தில் இருந்தாரா உன்னிகிருஷ்ணன்... தற்கொலைக்கு காரணம் என்ன..?
சென்னை ஐஐடி தற்காலிக கௌரவ விரிவுரையாளர் தற்கொலை குறித்து போலீஸ் விசாரணை.

தமிழ்களுடைய நாகரிகம் எப்படி மறைக்கப்பட்டது என்பதை அறிந்து கொண்டால்தான், எதிர்காலங்களில் வரக்கூடிய சவால்களை எதிர்கொள்ள முடியும் என அமைச்சா் தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அண்மைக்கால ஆய்வுகள் காட்டும் தமிழ்நாட்டு வரலாறு என்கிற முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு மாநிலக் கருத்தரங்கத்தைத் அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பேசிய அவர், இந்தியாவிலுள்ள வேறு எந்த மாநிலத்திலும் மேற்கொள்ளப்படாத தொல்லியல் ஆய்வுகள் தமிழகத்தில்தான் அதிக அளவில் செய்யப்படுகிறது. இதற்கான நிதியுதவியை முதல்வர் அளித்து வருகிறார். இந்தியாவின் வரலாறு கங்கைச் சமவெளியில் எழுதுவது அல்ல; அது காவிரிக்கரையில் இருந்து எழுதக்கூடிய வரலாறாக இருக்க வேண்டும் என்பதை நிரூபிக்கக்கூடிய வகையில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. கீழடி, பொருநை, வெம்பக்கோட்டை வைப்பாறு போன்ற இடங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் மூலம் தமிழ்நாட்டினுடைய வரலாறு எந்த அளவுக்குப் பின்னோக்கிச் செல்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
நாம் என்னவாக இருந்தோம் என்பதை அறிந்து கொண்டால்தான், எதிர்காலத்தில் நாம் என்னவாக வர வேண்டும் என்பதை தீர்மானிக்க இயலும். நம்முடைய தமிழர் நாகரிகம், நம் சமுதாயம் எப்படி இருந்தது, தமிழனுடைய நாகரிகம் எப்படி எல்லாம் மறைக்கப்பட்டது என்பதை எல்லாம் அறிந்து கொண்டால்தான், எதிர்காலங்களில் வரக்கூடிய சவால்களை எதிர்கொள்ள முடியும் என்றார் தங்கம் தென்னரசு.
நிகழ்ச்சிக்கு பின் பேட்டி அளிக்கையில் தொல்லியல் துறைக்குத் தமிழக முதல்வர் மிகுந்த அக்கறையோடு ஆதரவு தருகிறார். இதனால் பல இடங்களில் ஆய்வு நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கீழடி அருங்காட்சியகம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து, பொருநையில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணி வேகமாக நடைபெற்று வருகிறது. நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டபடி, தஞ்சாவூரில் சோழர்களின் பெருமையை விளக்கும் விதமாக மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே மிக விரைவிலேயே அருங்காட்சியம் அமைப்பதற்கான பணி தொடங்கப்படவுள்ளது. இதே போல கங்கைகொண்ட சோழபுரத்திலும் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றார் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தமிழ் பல்கலைக்கழக துனை வேந்தர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க: மீண்டும் ஒரு வேங்கைவயல்?
ஜாதி மோதலை தூண்டும் வகையில் பேசிய விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி AC. பாவரசை கைது செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியல். சாலை மறியல் போராட்டத்தால் குமுளி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு.
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, விடுதலை சிறுத்தை கட்சியினர் சிலர் அம்பேத்கர் சிலை முன்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது அம்பேத்கர் சிலையை உடைத்தெரிய வேண்டும் என கோரி சிலர் கோஷமிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிலர் இதனை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை வகித்த விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த முதன்மைச் செயலாளர் AC.பாவரசு பேசுகையில் ஜாதி மோதலை தூண்டும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. பேசியது குறித்து சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து பெரியகுளம் அருகே உள்ள எ.புதுப்பட்டியைச் சேர்ந்த கிராம மக்கள் ஜாதி மோதலை தூண்டும் வகையில் பேசிய விடுதலைச் சிறுத்தை கட்சியை நிர்வாகி AC பாவரசு மீது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் குமுளி - திண்டுக்கல் தேசியநெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு வந்த பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கீதா மற்றும் காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் விடுதலைச் சிறுத்தை கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட போக்குவரத்தை காவல்துறையினர் சீர் செய்தனர்.
இதையும் படிக்க:2 வாரங்களுக்கு இபிஎஸ் பற்றி உதயநிதி பேசக் கூடாது!!
அதிமுக-பாஜக கூட்டணி இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்த நிலையில், அதிமுகவிற்கும் பாஜகவுக்கும் மோதல் இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக, தமிழகத்தில் தனது தலைமையில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ளது. இந்நிலையில், பேரறிஞர் அண்ணாவைக் குறித்து, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டிருந்தார்.
இதற்கு அதிமுகவினர் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். அண்ணா, ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் குறித்த தவறான விமர்சனத்தை அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்தார்.
இரு தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதிமுக - பாஜக இடையே கூட்டணி இல்லை என்று முன்னாள் அமைச்சரும், அதிமுக நிர்வாகியுமான ஜெயக்குமார் கடந்த 2 நாட்களுக்கு முன் அறிவித்தார். இந்த அறிவிப்பை அதிமுக தொண்டர்கள் பலரும் இனிப்பு வழங்கி வரவேற்றனர். பதிலுக்கு பாஜக நிர்வகிகளும் இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த கேலிக் கூத்துகள் எல்லாம் அரங்கேறிய நிலையிலும், இது குறித்து அதிமுக தலைமையோ, பாஜக தேசியத் தலைமையோ வாய் திறக்கவில்லை.
இதையும் படிக்க : கனடா நாட்டினருக்கான விசாவிற்கு தடை - மத்திய அரசு அதிரடி
இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், கூட்டணி முடிவுகளை பாஜக தேசியத் தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்றும் கூறினார்.
அத்துடன், தனது தன்மானத்தை கேள்விக்குறியாக்கும் போது பதில் சொல்வது தனது உரிமை என்று கூறிய அண்ணாமலை, அறிஞர் அண்ணாவை தரக்குறைவாக விமர்சித்தது இல்லை என்றும் சரித்திரத்தில் உள்ளதை கூறினேன் என்றும் கூறினார்.
பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காகவே, தான் தலைவராக இருப்பதாக கூறிய அண்ணாமலை, தமிழகத்தில் 3-வது கட்சிக்கு மிகப் பெரிய இடம் இருக்கிறது என்று ஆக்ரோஷமாக கூறினார்.
இதனால், 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி நிலைக்குமா...? அல்லது தமிழ்நாட்டில் பாஜக தனித்து போட்டியிடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
''மகளிர் இட ஒதுக்கீடு; உயர் சாதியினருக்கு மட்டுமே பலன் அளிக்கும் என இந்திய தேசிய காங்கிரசின் தமிழ்நாடு மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் தனியார் மண்டபத்தில் திண்டுக்கல் தேனி காங்கிரஸ் கட்சியினரின் முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே எஸ் அழகிரி காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் ரகு வீராரெட்டி மற்றும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே எஸ் அழகிரி, நாடாளுமன்றத்தை தனது ஆளுமையின் கீழ் கொண்டுவர நினைக்கிறார் மோடி. தொகுதி வரையறைக்கு உட்பட்டு இட ஒதுக்கீடு கொண்டுவர தந்திரம் செய்கின்றனர்.
தொகுதி மறுவரறையின் மூலம் தென்மாநிலங்கள் நான்கும் பாரதிய ஜனதா கட்சிக்கு தேவையில்லை என நினைக்கின்றன. வட மாநிலங்களான மத்திய பிரதேசம், பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட ஏழு இந்தி பேசும் மாநிலங்கள் மட்டுமே பாரதிய ஜனதா கட்சிக்கு போதும் என்று நினைக்கிறார்கள். புதியதாக,120 தொகுதிகள் வடமாநிலங்களில் அதிகப்படுத்தி அதன் மூலம் பலனடைய நினைக்கிறார்கள். இதனால் பாரதிய ஜனதா கட்சிக்கு தென் மாநிலங்கள் தேவையில்லை என்பது நிருபனமாகியுள்ளது.
தொடர்ந்து பேசிய அவர், மகளிர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் நிறைய முரண்பாடுகள் உள்ளது. இதில் பலன் அடையப்போவது உயர்ந்த ஜாதியினர் மட்டுமே. மகளிர் இட ஒதுக்கீட்டில் ஓபிசி, SC இடம் பெறும் வகையில் இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும். அதில் எஸ் சி, எஃப் சி எவ்வளவு இருக்கின்றனர் என்ற கணக்கு இல்லை. அது இல்லாமல் எப்படி இட ஒதுக்கீடு கொடுக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிக்க: 2 வாரங்களுக்கு இபிஎஸ் பற்றி உதயநிதி பேசக் கூடாது!!
அண்ணா, பெரியார் காலத்திலேயே சனாதனம் ஒழிந்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரையில் பா.ஜ.க., மாவட்ட துணைத் தலைவர் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ முன்னிலையில் அ.தி.மு.க. வில் இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ, உதயநிதி வரலாறு தெரியாமல் பேசிவருவதாகவும், விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டு பிள்ளையாகவே இருப்பதாகவும் கூறினார். அண்ணா, பெரியார் காலத்திலேயே சனாதனம் ஒழிந்துவிட்டதாக கூறினார்.
இதையும் படிக்க : கனடா நாட்டினருக்கான விசாவிற்கு தடை - மத்திய அரசு அதிரடி
தொடர்ந்து பேசியவர், பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் பிரச்னை உள்ளது என யாராவது பேசி இருக்கிறோமா? என்றும், மாநில தலைவர் அண்ணாமலை சொன்ன விதம் தான் தவறு எனவும் விளக்கமளித்தார்.