ஹெல்மெட் அணியாமல் வந்த நபர்களுக்கு ரோஸ் கொடுத்த காவல் அதிகாரிகள்.. நூதன முறையில் விழிப்புணர்வு..!

ஹெல்மெட் அணியாமல் வந்த நபர்களுக்கு ரோஸ் கொடுத்த காவல் அதிகாரிகள்.. நூதன முறையில் விழிப்புணர்வு..!

திண்டுக்கல்லில் ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ரோஸ் கொடுத்து போக்குவரத்து கழகத்தினர் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தமிழகம் முழுவதும் 11ம் தேதி முதல் 17ம் தேதி வரை 34-வது சாலை பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  அதன்படி திண்டுக்கல் மண்டலத்தில் பொது மேலாளர் டேனியல் சாலமன் வழிகாட்டுதல் படி திண்டுக்கல்லில் துணை மேலாளர் பாண்டியராஜன் தலைமையில் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகே பதாகைகள் கையில் ஏந்தி போக்குவரத்து கழக ஊழியர்கள்  விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
 
அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்த வாகன ஓட்டிகளுக்கு நூதன முறையில் ரோஸ் கொடுத்து ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்தும், ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு சாக்லேட் கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தினர், ஹெல்மெட் அணிய ரோஸ் கொடுத்து  இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு நூதன விழிப்புணர்வு ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.