நடிகை யாஷிகா ஆனந்த் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு  

மாமல்லபுரம் அருகே கார் மோதி கவிழ்ந்த விபத்து தொடர்பாக நடிகை யாஷிகா ஆனந்த் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நடிகை யாஷிகா ஆனந்த் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு   

மாமல்லபுரம் அருகே கார் மோதி கவிழ்ந்த விபத்து தொடர்பாக நடிகை யாஷிகா ஆனந்த் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த ஈசிஆர் சூளேரிக்காடு பகுதியில் நள்ளிரவு 1-மணியளவில் அதிவேகமாக வந்த கார் சாலையின் சென்டர் மீடியனில் மோதி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இதில், காரை ஓட்டிவந்த நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது ஆண் நண்பர்கள் படுகாயத்துடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

பவானியின் உடலை கைப்பற்றிய மாமல்லபுரம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து அதிவேகமாக காரை ஓட்டியது, உயிர்சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளில் நடிகை யாஷிகா ஆனந்த் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்,