கொடூரமாகத் தாக்கப்பட்ட போலீசார்,. பதுங்கியிருந்த இளைஞர்கள் கைது.! 

கொடூரமாகத் தாக்கப்பட்ட போலீசார்,. பதுங்கியிருந்த இளைஞர்கள் கைது.! 

வத்தலக்குண்டு அருகே சோதனைச் சாவடியில் போலீசாரை தாக்கிய வழக்கில் மேலும் 3 இளைஞர்கள் கைது 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே  உசிலம்பட்டி சாலையில் திண்டுக்கல் மதுரை மாவட்ட எல்லையில் அமைக்கப்பட்டுள்ள விருவீடு காவல் நிலைய சோதனை சாவடியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்கள் மற்றும் போலீஸார் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆகியது.

 இந்த தாக்குதலில் காயமடைந்த காவலர் மேகநாதன் அளித்த புகாரின் பேரில் சம்பவத்தில் தொடர்புடைய உசிலம்பட்டி அடுத்த நல்லுதேவன் பட்டியைச் சேர்ந்த முத்துமாணிக்கம், ரஞ்சித்,  காளிதாஸ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். மேலும் இத்தாக்குதல் சம்பவத்தில் போலீசாரை பெரிய தென்னம் மட்டையை எடுத்து தாக்கிய வாலிபர் உட்பட 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் உசிலம்பட்டியில் பதுங்கி இருந்த சம்பவத்தில் அஜித், தமிழரசன், நவீன் ஆகிய மேலும் மூன்று பேரை விருவீடு போலீசார் கைது செய்தனர். விசாரணைக்குப் பின் அவர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர் காவல்துறையினர்.