இந்திய அரசின் தடையை மீறி...ஏமன் நாட்டில் இருந்து சென்னை வந்தவர் ஏர்போர்ட்டில் கைது!!

இந்திய அரசு தடை விதித்த ஏமன் நாட்டில் இருந்து சென்னை வந்தவரை ஏர்போர்ட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

இந்திய அரசின் தடையை மீறி...ஏமன் நாட்டில் இருந்து சென்னை வந்தவர் ஏர்போர்ட்டில் கைது!!

இந்திய அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு ஏமன், லிபியா ஆகிய நாடுகளுக்கு செல்ல  தடை விதித்திருக்கிறது. அதையும் மீறி இந்த நாடுகளுக்கு சென்று வருபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் ஏமன் நாட்டில் இருந்து வந்த நபர் ஒருவரை, குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனர்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு சார்ஜாவில் இருந்து விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த விழுப்புரத்தை சேர்ந்த முருகன் என்பவரது பாச்போர்ட்டை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

சோதனையின்போது, அவர் ஏமன் நாட்டுக்கு சென்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனிடையே, முருகன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தான் சவுதி அரேபியாவிற்கு கட்டிட வேலைக்காக சென்று உள்ளார். பின்னர் அங்கிருந்து ஏமன் நாட்டுக்கு சென்றுவிட்டு தற்போது சென்னை திரும்பியது தெரியவந்துள்ளது. 

இதையடுத்து இந்திய அரசு விதித்த தடையை மீறி ஏமன் நாட்டிற்கு சென்று வந்த முருகனை, குடியுரிமை அதிகாரிகள் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த  விமான நிலைய போலீசார்  முருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.