பிளஸ் 2 மாணவி கடத்தல்...! கண்டுபிடித்து தரக்கோரி பெற்றோர் தீக்குளிக்க முயற்சி..!

மதுரையில் பிளஸ் 2 மாணவி கடத்தல்... மகளை கண்டுபிடித்து தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பெற்றோர்கள் தீக்குளிக்க முயற்சி...!

பிளஸ் 2 மாணவி கடத்தல்...! கண்டுபிடித்து தரக்கோரி பெற்றோர் தீக்குளிக்க முயற்சி..!

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள சூரக்குலத்தைச் சேர்ந்தவர்  முனிராஜ். இவரது 17 வயது மகள் பிளஸ் 2 முடித்து கல்லூரிக்கு விண்ணப்பித்திருக்கும் நிலையில், எதிர் வீட்டைச் சேர்ந்த சூர்ய கண்ணன், அவரது தம்பி ராசுக்குட்டி ஆகியோர் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து மாவட்ட கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரிடம் புகார் தெரிவித்து 65 நாட்களாகியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் மனமுடைந்த முனிராஜ், அவரது மனைவி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். உடனே அங்கு இருந்த பாதுகாவலர்கள், அவர்களை மீட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரனை செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.