ரத்த தானம் செய்து பட்டையைக் கிளப்பிய போட்டோகிராபர்கள்!!

உலக போட்டோகிராபர்கள் தினத்தன்று, போட்டோகிராபர்கள் சேர்ந்து, ரத்த தானம் செய்தனர்.

ரத்த தானம் செய்து பட்டையைக் கிளப்பிய போட்டோகிராபர்கள்!!

கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் 300 க்கும் மேற்பட்ட போட்டோஸ் மற்றும் வீடியோ கலைஞர்கள் உள்ளனர். இன்று உலக புகைப்பட தின விழாவையொட்டி உலக முழுவதும்  பல்வேறு வகையில் புகைப்பட கலைஞர்கள் புகைபடதினத்தை  சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக கோபிசெட்டிபாளைத்தில் உள்ள  புகைப்பட கலைஞர்கள் ஒளிப்பதிவாளர்கள், பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் 50 க்கும் மேற்பட்ட புகைபட கலைஞர்கள் குருதி தானம் செய்து புகைபட தின விழாவை சிறப்பித்தனர்.

மேலும் படிக்க | உலக போட்டோகிராபி தினத்தன்று, போட்டோகிராபர்கள் அமைதி பேரணி!!!

இந்நிகழ்ச்சியில் கோபி சுற்றுவட்டார டி.என்.பாளையம், கள்ளிப்பட்டி, கொளப்பளுர், கரட்டடிபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட போட்டோ வீடியோ சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\