பெட்ரோல் டீசல் விலை உயர்வு.. நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் போராட்டம்.! 

பெட்ரோல் டீசல் விலை உயர்வு.. நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் போராட்டம்.! 

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிவாயு பொருட்களின் விலை வரலாறு காணாத உச்சத்தை பெற்றுள்ளதை கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சென்னையில் நடைபெற்ற நூதன போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் இருசக்கர வாகனங்களை தள்ளிச் சென்று எரிவாயுவிற்கு கடன் வழங்க கோரி வங்கி மேலாளரிடம் மனு அளித்தனர். 

இதேபோல், திருச்சியிலும் பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து சைக்கிள் பேரணி நடத்தினர். அப்போது பேரணி மலைக்கோட்டை பகுதியில் சென்று கொண்டிருக்கையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.  

இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதில், பிரதமர் மோடி, உள்துறை அமித்ஷா உள்ளிட்டோருக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய காங்கிரஸ் கட்சியினர், சைக்கிளில் பேரணியாக சென்றும் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர். இதேபோல் திருவள்ளூரில் நடைபெற்ற மற்றொரு பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் கலந்துகொண்டு 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சைக்கிள் ஓட்டி எதிர்ப்பை பதிவு செய்தார்.