"தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய் செய்தி" உயர் நீதிமன்றத்தில் மனு!

"தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய் செய்தி" உயர் நீதிமன்றத்தில் மனு!

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய் செய்தி வெளியிட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஆன் லைன் செய்தி நிறுவன செய்தி ஆசிரியர் நுபுர் சர்மா மற்றும் நிறுவன தலைமை செயல் அதிகாரி ராகுல் ரோஷன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய் செய்தி வெளியிட்டதாக  ஆன் லைன் செய்தி நிறுவன செய்தி ஆசிரியர் நுபுர் சர்மா மற்றும் நிறுவன தலைமை செயல் அதிகாரி ராகுல் ரோஷன் ஆகியோருக்கு எதிராக திமுக ஐ.டி பிரிவு உறுப்பினர் சூரியபிரகாஷ், திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் இரு பிரிவினரிடையே விரோதத்தை ஊக்குவித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி நுபுர் சர்மா உள்பட இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தியது.

அதன்படி, தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி நுபுர் சர்மாவும், ராகுல் ரோஷனும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி சத்திகுமார் சுகுமார குருப், ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிக்க:நடுநிலைமை வகிக்குமா செங்கோல்?