ஜெ.விடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை ஏலம் விட கோரி மனு தாக்கல் - டி.நரசிம்மமூர்த்தி தெரிவிப்பு!

ஜெ.விடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை ஏலம் விட கோரி மனு  தாக்கல் - டி.நரசிம்மமூர்த்தி தெரிவிப்பு!

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை ஏலம் விட்டு அந்த நிதியை பொதுமக்களுக்கு பயன்படுத்த கோரி ஆர்.டி.ஐ. ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது அவரது வீட்டிலிருந்து ஆயிரக்கணக்கான புடவைகள், நூற்றுக்கணக்கான செருப்புகள், கிலோ கணக்கில் வெள்ளி, தங்க நகைகள் ஆயிரக்கணக்கான அசையா சொத்துக்கள் மற்றும் பல அசையும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த 26 வருடங்களாக கருவூலத்தில் இருந்து வரும் காரணத்தினால் புடவை உள்ளிட்டவை சேதமடைய வாய்ப்புள்ளது. இதனால் அவற்றை ஏலத்தில் விட்டு அந்த பணத்தை பொது மக்களின் நிதியாக கொண்டு வர வேண்டும் என மனுத் தாக்கல் செய்துள்ளாதாக பெங்களூருவை சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் டி.நரசிம்மமூர்த்தி தெரிவித்துள்ளார்.