சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாள்...வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாளையொட்டி, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாளையொட்டி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், திமுக அரசு, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றும், அவர்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் பிற நலத்திட்டங்களுக்காகவும் வழங்கப்படும் நிதியினை உயர்த்திக் கொண்டே வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிக்க : தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி!

இந்நாளில் "மாற்றுத்திறனாளிகளுக்கான நிலையான நீடித்த இலக்குகளை அடைந்திடவும், அவர்களின் நலனை பாதுகாக்கவும் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்" என அனைவரும் ஒன்றிணைந்து உறுதி ஏற்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.