கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் கொடுத்தார்களே மறந்து விட்டார்களா? கேள்வி எழுப்பிய அமைச்சர்

கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் கொடுத்தார்களே மறந்து விட்டார்களா?  கேள்வி எழுப்பிய அமைச்சர்

சென்னை கலைவாணர்‌ அரங்கில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் பொன் விழா  ஆண்டையொட்டி 25வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்நிகழ்வில் தி.மு.கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி,உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடிடி.கே.எஸ் இளங்கோவன்,தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். மாவட்ட செயலாளர்கள்,தொழிற் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சட்டப்பேரவையும் கலைவாணர் அரங்கமும்: மீண்டும் வரலாறு திரும்புகிறது! | The  assembly and the kalaivanar arangam: Is History Back? - hindutamil.in

 மேடையில் பேசிய டி.கே.எஸ்.இளங்கோவன்,

திராவிட முன்னேற்ற கழகத்தின் வலிமை என்பது மக்களின் வலிமை.தொழிற் சங்கத்துடனான முரண்பாடு வரும் போது அதை உடனடியாக உணர்ந்து தொழிற் சங்கத்தினரின் கோரிக்கைகளை ஏற்று உடனடியாக செய்து தந்தார்.கை ரிக்க்ஷாவை ஒழித்தவர் கலைஞர்.1969க்கே பிறகு தான் தொழிற் சங்கங்கள் உருவானது.
நம்முடைய சமூக நீதி போராடட்த்தில் நமக்கு எப்போதும் துணை  நிற்பவர்கள் தொழிற் சங்கத்தைச் சேர்ந்தவர்கள்.அதனால் தான் அண்ணாவின் சொற்படி உடனடியாக தொழிற் சங்கங்கள் உருவாக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

டி.கே.எஸ் இளங்கோவன் திமுகவின் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கம்  DMK MP TKS Elangovan is removed from the post of Spokesperson | Indian  Express Tamil

மேலும் படிக்க | கொழுத்தும் வெயிலுக்கு என்ன பண்ணலாம் ? பண்ணக்கூடாது!!!

அமைச்சர் பொன்முடி பேசுகையில்., 

வாழ்த்தப் பட வேண்டியவர்‌ தலைவர் கலைஞர் ஒருவர் மட்டுமே.தனியார் மயமாக இருந்த அனைத்து துறைகளையுமே தொடங்கி வைத்தவர் அவர்.எனக்கு இருக்கின்ற பெருமையே நான் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் இருந்திருக்கிறேன். தொழிலாளர் துறை அமைச்சராகவுமே இருந்தவன் என்பதில் பெருமையாகவே இருக்கிறது என்றும் தெரிவித்தார்.நான் தொழிலாளர்களின் போராட்டத்தை உணர்ந்தவன்.
 காரணம் நானும் ஜாக்டோ ஜியோவில் இருந்து போராடி சிறை சென்றவன்.நான்கு சதவீத  ஓய்வூதிய உயர்வும் செய்யப் பட்டிருக்கின்றது.

கருணாநிதிக்கு ஒரு பேராசிரியர்... ஸ்டாலினுக்கும் ஒரு `பேராசிரியர்' -  பொன்முடியின் அரசியல் பயணம்...| Political Journey of Minister Ponmudi. -  Vikatan

அமைப்பு சாரா தொழிலாளர்கள் தனியாரிடத்திலே வேலை செய்பவர்கள்.
அனைத்து துறை தொழகலாளர்களையுமே அழைத்து வைத்து பேச்சு வார்த்தை நடத்துவபவர் தான் முதலமைச்சர்.கள்ளச் சாராயம் குடித்து இறந்தார்கள் என்பதை அரசியல் ஆக்க வேண்டாம் காரணம் இது இப்போது மட்டுமல்ல காலாகாலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

விஷ சாராயம் விற்பனை குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் | Tirupur :  Public can complain about sale of intoxicating liquor

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் கொடுத்தார்களே மறந்து விட்டார்களா?

 மேலும் படிக்க | ஜல்லிக்கட்டு தீர்ப்பை பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டும் - முதலமைச்சர் வரவேற்பு