ஆண்டுதோறும் 500 ரேசன் கடைகளுக்கு நிரந்தர கட்டடம் - அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு

நடப்பாண்டு முதல் ஆண்டுதோறும் 500 நியாய விலைக்கடைகளுக்கு நிரந்தர கட்டடம் கட்டித்தரப்படும் என சட்டபேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் 500 ரேசன் கடைகளுக்கு நிரந்தர கட்டடம் - அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு

சட்டப்பேரவையில், உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ஆற்காடு தொகுதி, புங்கனூர் ஊராட்சி, எல்லாசி குடிசை, வரதேசி நகர், விளாப்பாக்கம் பேரூராட்சி, சின்னதக்கை பகுதிகளில் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் அமைப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.

மேலும், 6 ஆயிரத்து 300 முழு நேர நியாயவிலை கடைகளுக்கும், 763 பகுதி நேர நியாயவிலைக் கடைகளுக்கும் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருவதாகவும், நிரந்தர கட்டடம் கட்டுவது தொடர்பாக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும், நடப்பாண்டு முதல், ஆண்டுதோறும் 500 கடைகள் என்ற வீதத்தில் நிரந்தர கட்டடம் கட்டித்தரப்படும் எனவும் தெரிவித்தார்.