பெரியார் தமிழ்நாடு, இந்தியாவிற்கு மட்டுமல்ல...முதலமைச்சர் பெருமிதம்!

பெரியார் தமிழ்நாடு, இந்தியாவிற்கு மட்டுமல்ல...முதலமைச்சர் பெருமிதம்!

தமிழ்நாட்டிற்கு எழுச்சியையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்திய ஊர் வைக்கம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் கேரள மாநில அரசு சார்பில் வைக்கம் புன்னமடை காயல் கரையோரத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்கச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அம்மாநில அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் வைக்கம் போராட்ட வீரர்கள் நினைவிடம், காந்தி, பெரியார் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதையும் படிக்க : பில்லு எங்க?... அண்ணாமலையை கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

பின்னர் வைக்கம் நூற்றாண்டு விழா இலட்சினையை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசு சார்பில் நிறுவப்பட்டுள்ள நினைவுத் தூணுக்கும் மரியாதை செலுத்தினார். இதையடுத்து, நடைபெற்ற வைக்கம் நூற்றாண்டு நினைவு விழாவில் உரையாற்றிய முதலமைச்சர்  மு க ஸ்டாலின், மலையாளத்தில் பேசி தனது உரையைத் தொடங்கினார்.

வைக்கம் போராட்டம் தமிழ்நாட்டிற்கு உணர்ச்சியையும் எழுச்சியையும் ஏற்பத்தியதோடு நாட்டிற்கே வழிகாட்டிய போராட்டம் என்று கூறினார். மேலும், பெரியார் தமிழ்நாடு, இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கான தலைவர் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், வெற்றிப் பெருமிதத்தோடு இந்த மண்ணில் கம்பீரமாக நின்று கொண்டிருப்பதாகவும், வைக்கம் போராட்டம் தமிழ்நாட்டில் நடைபெற்ற ஆலய நுழைவு போராட்டங்களுக்கு தூண்டுகோலாக இருந்ததாகவும் கூறினார்.