பெரியார் பல்கலைக்கழகம் - மெல்போர்ன் பல்கலைக்கழகம் இடையே ஒப்பந்தம்.. என்ன ஒப்பந்தம்?

சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்திரேலியாவின் உலகப் புகழ் பெற்ற மெல்போர்ன் பல்கலைக்கழகம் இடையே கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்புக்கான  ஒப்பந்தம் கையெழுத்தானது.

பெரியார் பல்கலைக்கழகம் - மெல்போர்ன் பல்கலைக்கழகம் இடையே ஒப்பந்தம்.. என்ன ஒப்பந்தம்?

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மெல்போர்ன் பல்கலைக்கழக சர்வதேச தொடர்புகளை மேற்கொள்ளும் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டனர். பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆஸ்திரேலிய பேராசிரியர், தமிழ்ப் புத்தாண்டுகளை தமிழில் கூறினார்.

பின்னர் கல்வி கட்டமைப்பு தொடர்பாக பரஸ்பரம் விளக்கிக் கொண்டதையடுத்து இரு பல்கலைக் கழகங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம்  மாணவர்களின் கல்வி ஆராய்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவை மேம்படும்  என்றும் இரு பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபடவும் வழிவகை செய்வதாக துணை வேந்தர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.