உச்சத்தை நோக்கி தங்கம் விலை…  

தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உச்சத்தை நோக்கி தங்கம் விலை…   

தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் கடந்த வாரத்துக்கு முன்னர் தங்கம் விலை அதிரடியாக சரிந்தது. கடந்த 6ம் தேதியில் இருந்து அடுத்தடுத்த நாட்களில் தொடர் சரிவைக் கண்டு ரூ.36 ஆயிரத்துக்கு மேல் விற்கப்பட்டு வந்த தங்கம், ரூ.35 ஆயிரத்துக்குக் கீழ் சென்றது. அதாவது, 4 நாட்களிலேயே தங்கம் விலை ஆயிரம் ரூபாய்க்கு மேல் குறைந்துவிட்டது. இப்படியே தங்கம் விலை குறைந்து விடும் என சாமானிய மக்கள் எண்ணிக் கொண்டிருந்த வேளையில் மீண்டும் அதிகரித்து அதிர்ச்சியளித்தது. தொடர்ந்து ஒரு வாரமாக தங்கம் விலை அதிகரித்து வருவதால் தங்கம் விலை மீண்டும் உச்சத்தை அடையுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.13 அதிகரித்து ரூ.4,448க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.104 அதிகரித்து ரூ.35,584க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.68.20க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.68,200க்கும் விற்பனையாகிறது.