ஈவிகேஎஸ்க்கு மகத்தான் வெற்றி...சஞ்சலத்தில் அதிமுக...கே.எஸ்.அழகிரி பேட்டி !

ஈவிகேஎஸ்க்கு மகத்தான் வெற்றி...சஞ்சலத்தில் அதிமுக...கே.எஸ்.அழகிரி பேட்டி !

ஈரோடு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மறைவையொட்டி, அத்தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, நாதக சார்பில் மேனகா உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களம் இறங்கினர். அதனைத்தொடர்ந்து, அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனையடுத்து, பல்வேறு பாதுகாப்புகளுக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்  நடைபெற்றது. இந்நிலையில் ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்ததைபோன்று, மார்ச் 2 ஆம் தேதியான இன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையானது 15 சுற்றுகள் என்ற அடிப்படையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.

இதையும் படிக்க : மேற்கு வங்க இடைத்தேர்தலில் பின்னடைவை சந்தித்தார் மம்தா பானர்ஜி...!

இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, எங்களை எதிர்த்து நிற்கும் அதிமுக சஞ்சலத்தில் உள்ளதாகவும், தன்னம்பிக்கை இல்லாத கட்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள் எனவும் விமர்சனம் செய்துள்ளார்.