எம்.ஜி.ஆர். பற்றி தவறாக பேசினால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்... ஜி.கே. வாசன் கருத்து...

அரசியல் வரலாற்றில் எம்ஜிஆரை பற்றி அனைவருக்கும் அறிவார்கள்; எம்ஜிஆர் பற்றி தவறாக பேசினால் அரசியலுக்கு அப்பாற்பட்ட பொதுமக்களும் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று ஜி கே வாசன் தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர். பற்றி தவறாக பேசினால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்... ஜி.கே. வாசன் கருத்து...

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கட்சி தலைவர் ஜி கே வாசன் தலைமையில் மாநில மகளிரணி சார்பில் உலக முதியோர் தினத்தை முன்னிட்டு முதியோர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் நடிகர் நிழல்கள் ரவி மற்றும் பாடகி வினயா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜி.கே.வாசன்,

2030 ஆண்டுக்குள் உலகில் முதியோரின் எண்ணிக்கை 46 சதவீதம் அதிகரிக்கும்  ஐ.நா. தகவல் தெரிவித்துள்ள நிலையில் , தொடர்ந்து முதியோர் எண்ணிக்கை அதிகரிக்து வருவதால் அவர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை மத்திய மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என தமாக கட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் வெற்றி பெரும் இடத்தை நாங்கள் பெற்றுள்ளோம் .தேர்தலில் வெளிப்படுவதற்கான கள பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம் தேர்தலில் நிச்சயமாக அதிமுகவை வெற்றி பெறச் செய்வோம் என்று கூறினார்.

தேர்தல் விதி மீறல்கள் அதிகம் நடைபெறுகிறது என்று எங்கள் கூட்டணியை சேர்ந்தவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் கூறியுள்ளனர் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற வேண்டும் என்பது உறுதி செய்யும் வகையில் அவர்களுக்கு  போது தமிழக தேர்தல் ஆணையம் நம்பிக்கை கொடுக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் வரும் காலங்கள் பண்டிகை காலங்கள் என்பதால் குருநாத் பரவும் அபாயம் உள்ளது. எனவே பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

கொடுத்து சிவந்த கரம் கொண்ட எம்ஜிஆரின் காலம் தமிழக அரசியல் வரலாற்றில் எம்ஜிஆரை பற்றி அரசியல்வாதிகள் முதல் குழந்தைகள் வரை நன்கு அறிவார்கள். எனவே எம்ஜிஆரை பற்றி தவறாக பேசுவது அரசியலுக்கு அப்பாற்பட்ட பொதுமக்களும் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் கூறினார்.

மேலும் இன்னும் மூன்று மாதங்களில் நடைபெற உள்ள மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு மிக தூரமாக இருப்பதாக நான் கருதுகிறேன் அவை உத்தரப்பிரதேசமாக இருந்தாலும் சரி பஞ்சாப்பாக இருந்தாலும் சரி என்று  கூறினார்.

அரசியலை பொறுத்தவரை எண்ணிக்கையை பெரிதாக நினைத்தால் எந்த கட்சியும் எந்த கட்சியுடனும் கூட்டணியில் இருக்க முடியாது  என்றும் தெரிவித்தார்.