புரட்டாசி மாதம் நிறைவடைந்ததையொட்டி  மீன் வாங்க குவிந்த மக்கள்... விலை அதிகமானாலும் மீன்களை அள்ளிச்சென்ற மக்கள்...

சென்னை காசிமேட்டில் புரட்டாசி மாதம் நிறைவடைந்ததையொட்டி,  மீன்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

புரட்டாசி மாதம் நிறைவடைந்ததையொட்டி  மீன் வாங்க குவிந்த மக்கள்... விலை அதிகமானாலும் மீன்களை அள்ளிச்சென்ற மக்கள்...

சென்னையில் காசிமேட்டில், வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்நிலையில் புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் புரட்டாசி மாதம் நிறைவடைந்த முதல் ஞாயிற்றுக் கிழமையான இன்று காசிமேடு மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

காசிமேடு மீன் விற்பனை சந்தைக்கு அதிகாலை 4 மணி முதல் பொதுமக்கள் வரத் தொடங்கினர். நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்ததால், விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. இங்கு வழக்கமாக 150 டன் முதல் 180 டன் வரை மீன்கள் கடலில் இருந்து பிடித்து வரப்படும். இந்நிலையில் வரத்து குறைவாக இருந்ததால் மீன்களின் விலையும் உயர்ந்து இருந்தது. 

குறிப்பாக இறால் ஒரு கிலோ 350லிருந்து 160 ரூபாய் வரை விற்கப்பட்டது. சங்கரா மீன் கிலோ 230-க்கும், 2.5 கிலோ எடை கொண்ட கொடுவா மீன் 600-ரூபாய்க்கும் விற்கப்பட்டது. விலை சற்று அதிகமாக இருந்தாலும் மக்கள் அதிக அளவில் வாங்கிச் சென்றனர்.