மழைக்கு மத்தியிலும் குடை பிடித்தபடி வந்து வாக்களிக்கும் மக்கள்!!

மழைக்கு மத்தியிலும் குடை பிடித்தபடி வந்து  வாக்களிக்கும் மக்கள்!!

திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருவதால் மழைக்கு மத்தியிலும் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே தமிழகம் முழுவதும் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்துவரும் நிலையிலும் குடை பிடித்தபடி நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். 

இதேபோல் கும்பகோணத்திலும் காலை முதல் மழை பெய்துவரும் நிலையில், மழைக்கு மத்தியிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.