மக்களே குடை இல்லாமல் வெளியே போகாதீங்க. இந்த மாவட்டங்களில் நாளை அதி கனமழை பெய்ய வாய்ப்பு!!

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தமிழகத்தில் அதி கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மக்களே குடை இல்லாமல் வெளியே போகாதீங்க. இந்த மாவட்டங்களில் நாளை அதி கனமழை பெய்ய வாய்ப்பு!!

தெற்கு வங்க கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய, இந்திய பெருங்கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகை, மயிலாடுதுறை, கடலுார் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில், இன்று மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலுார், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழையும்,  கடலுார், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, உள்ளிட்ட பல மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர் உட்பட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நாளை மறுதினம் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம்,

பொதுவாக மார்ச் ஒன்றாம் தேதி கோடை காலம் துவங்கி விடும் என்றும், ஆனால் எப்போதும் இல்லாத வகையில், இந்த ஆண்டு கோடை வெயில் துவங்குவதற்கு பதில் புயல் சின்னம் உருவாகியுள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும், நாளை அதி கனமழை பெய்யும் மாவட்டங்களுக்கு, ரெட் அலெர்ட் எச்சரிக்கையும் மிக கனமழை மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட்டும் விடப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.