அரசு மருத்துவமனையில் மின்வெட்டால் நோயாளிகள் அவதி.. சிகிச்சை பாதிக்கப்படும் அபாயம்!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் கடும் அவதிக்குள்ளாகி உள்ளாகி வரும் நோயாளிகள், மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

அரசு மருத்துவமனையில் மின்வெட்டால் நோயாளிகள் அவதி.. சிகிச்சை பாதிக்கப்படும் அபாயம்!!

ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை , தீவிர சிகிச்சை , எலும்பு முறிவு சிகிச்சை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட சிகிச்சை பிரிவுகள் உள்ளன.

இங்கு சாலை விபத்துகளில் காயமடைந்தவர்கள், பாம்பு கடி, அடிதடி போன்றவைகளால் காயம்பட்டவர்களுக்கும்,  இதய நோயால் அவதிப்படுவோருக்கும்  சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் அவசர சிகிச்சை பிரிவில் தினசரி 50க்கு மேற்பட்ட நோயாளிகள்  அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில், கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால்  மருத்துவ கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடையால்  விசிறி வைத்து வீசும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனிடையே ஜெனரேட்டர், இன்வர்டர் வசதிகளுடன் மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக  தரம் உயர்த்தப்பட்டபோதும்,   அவற்றை மருத்துவமனை நிர்வாமக் முறையாக பயன்படுத்தவில்லை  என நோயாளிகளின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஏழை எளிய மக்களும்  தரமான சிகிச்சை கிடைத்திட வேண்டும் என தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் மருத்துவ மனை நிர்வாகம் அலட்சிய போக்கு பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  எனவே மருத்துவமனை செயல்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகம் தொடர் ஆய்வு செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.