முதலமைச்சர் தலைமையில் நாடாளுமன்ற கூட்டம்.... பங்கேற்க அழைப்பு!!

முதலமைச்சர் தலைமையில் நாடாளுமன்ற கூட்டம்.... பங்கேற்க அழைப்பு!!

வரும் 29 ஆம் தேதி திமுக நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறவுள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் 2023 - 2024 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் அது குறித்து விவாதிப்பதற்காகவும் திமுக உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காகவும் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. 

திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத்தின் மக்களைவை மற்றும் மாநிலங்கவையின் அனைத்து திமுக உறுப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  தொடரைக் கைப்பற்றிய இந்தியா....தரவரிசையில் முதலிடம்!!!