கையில் மதுவுடன் முதலமைச்சர் பாடலுக்கு ஆட்டம் போட்ட வக்கீல்!

மது போதையில், வழக்கறிஞர் ஒருவர், முதலமைச்சர் ஸ்டாலினின் பிரச்சார பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோ தற்போது படு வைரலாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கையில் மதுவுடன் முதலமைச்சர் பாடலுக்கு ஆட்டம் போட்ட வக்கீல்!

ஸ்டாலின் தான் வாராரு! விடியல் தரப்போறாரு!” என்ற பாடல் தமிழக முழுவதும் பட்டி தொட்டி வரை பரவி பெரும் வரவேற்பை பெற்ற பாடல். இந்த பாடல் 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அனைத்து தொகுதிகளிலும், தொலைக்காட்சி மற்றும் அனைத்து வகையான விளம்பரங்களிலும் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கான அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஒலிக்கப்பட்டது மட்டுமல்லாமல் திமுக-வினர் பலரும் தங்களின் ரிங்டோன் ஆக இந்த பாடலை பயன்படுத்தினர்.

இப்படி பிரபலமான இந்த பாடலுக்கு கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்கவரப்பட்டு திமுக ஒன்றிய கவுன்சிலர், வழக்கறிஞர் குமரகுரு என்பவர் கையில் புதுச்சேரி வகை மது பாட்டிலுடன் காரில் ஸ்டாலின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு நடனமாடும் வீடியோ காட்சி தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | மரக்காணம் அருகே மீன்பிடி துறைமுகம் அமைவது குறித்து மீனவர்களிடம் கருத்து கேட்ட சட்டமன்ற உறுப்பினர்!

குறிப்பாக உள்ளாட்சி பிரதிநிதிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடன் நடைபெற்ற மாநாடு ஒன்றின் ஸ்டாலின் பேசியிருந்தார். இந்நிலையில் திமுகவை சேர்ந்த வார்டு கவுன்சிலர் ஒருவர் மது பாட்டிலுடன் குத்தாட்டம் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவுதுடன் அதனை கண்டிக்கும் வகையில் பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் அவர் புதுச்சேரி வகை மது பாட்டில்களை கையில் வைத்துக் கொண்டு ஆட்டம் போடுகிறார் தமிழக பகுதியாக இருந்தால் புதுச்சேரியில் இருந்து மது கடத்திவரப்பட்டதா? என காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | திராவிட மாடலா ? தமிழ் மாடலா ?விவாதம் நடத்த தயார்...ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால்!