பனிமயமாதா பேராலய திருவிழா... பக்தர்கள் இன்றி தொடங்கியது...
வரலாற்றில் 2-ம் முறையாக பனிமய மாதா பேராலய திருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி தொடக்கம் - மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை ஆலய கொடியை ஏற்றி வைத்தார்.

தஞ்சாவூரில் பெண் ஒருவர் சார்ஜ் போட்டுக்கொண்டே பேசியபொழுது, எதிர்பாராதவிதமாக போன் வெடித்து உயிரிழந்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே ஆடுதுறை விசித்திர ராஜபுரத்தில் வசித்து வருபவர் கோகிலா(32). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தத நிலையில் தனது மகன் பிரகதீஷ்(9) உடன் தனியாக வசித்து வருகிறார்.
இவர் கபிஸ்தலத்தில் பிரகதீஷ் என்ற பெயரில் செல்போன் மற்றும் கடிகாரம் சரி செய்யும் கடையை நடத்தி வந்துள்ளார். வழக்கம்போல கடைக்கு வந்த அவர், தனது வேலைகளை செய்துள்ளார். அப்பொழுது, செல்போனில் சார்ஜ் போட்டபடி பேசியதாக கூறப்படுகிறது.
இதில் மின்கசிவு ஏற்பட்டு செல்போன் வெடித்துள்ளது. செல்போன் வெடித்ததில், கடை தீ பற்றி எரியத் தொடங்கியுள்ளது. கடையின் உள்ளே இருந்த கோகிலா கூச்சலிட அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை போராடி அணைத்துள்ளனர்.
இருப்பினும் கோகிலா தீயில் சிக்கி உடல் முழுவதும் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கபிஸ்தலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீயில் கருகி பெண் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது
இதையும் படிக்க || பள்ளியில் சாதிய பாகுபாடு... படித்தது போதுமென குழந்தைகளை அழைத்துச் சென்ற பெற்றோர்!!
நடப்பாண்டில் 17 ஆயிரம் பேரும், அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேரும் அரசுப் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு, சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, தேர்வு செய்யப்பட்ட இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், சுருக்கெடுத்தர்கள், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.கே. எஸ். எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், சேகர் பாபு மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதையும் படிக்க : தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட 11 வயது சிறுமி...போலீசார் தீவிர விசாரணை!
முன்னதாக நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு பணிக்கான தேர்வுகளை தமிழில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை திமுக அரசு தொடர்ந்து வலியுறுத்தும் என்றும் கூறினார்.
நடப்பாண்டில் 17 ஆயிரம் பேருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று கூறிய முதலமைச்சர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 ஆயிரம் பேர் அரசு பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் உறுதி அளித்தார்.
சென்னை தரமணி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை தரமணி மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையை இணைக்கும் எம்.ஜி.ஆர் சாலையில் உள்ள பிளக்ட்ரானிக்ஸ் என்ற மென்பொருள் நிறுவனத்தில் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிறுவனத்தில் வரி ஏய்ப்பு செய்வதாக பெறப்பட்ட புகார்களின் பேரில் பெங்களூருவில் இருந்து வந்திருக்கும் 8 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க : தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட 11 வயது சிறுமி...போலீசார் தீவிர விசாரணை!
இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள பிளக்ஸ் தொழிற்சாலையிலும் சோதனை நடைபெற்று வருகிறது. அனைத்து விதமான ஸ்மார்ட் போன்களுக்கும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் இந்த நிறுவனத்தில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடைபெறுவதாக அளித்த புகாரின் பேரில், சென்னையில் உள்ள வருமான வரித் துறை அதிகாரிகள் 10 பேர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் அலங்காரத்திற்காக கட்டப்பட்ட வாழைத்தாரை தொண்டர்கள் போட்டி போட்டு கொண்டு அறுத்து சென்றனர்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் திமுக சார்பில் தர்மபுரி மாவட்ட இளைஞரணிக்கான செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திமுக இளைஞரணி செயலாளர் விளையாட்டு மற்றும் இளைஞர்கள் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பொதுமைக்குளுடன் பேசியுள்ளார்.
அப்போது ஏராளமான திமுகவினர் மற்றும் இளைஞர் அணி பொறுப்பாளர்கள் 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிவதற்கு முன்பாகவே ஆங்காங்கே வாழை மரங்களை கட்டிய இடத்தில் காத்திருந்த கட்சித் தொண்டர்கள் வாழை மரத்தில் இருந்த வாழைத்தார்களை அறுத்து எடுத்து செல்ல முற்பட்டனர்.
இதைப் பார்த்த காவல்துறையினர், கூட்டம் முடிவடைவதற்கு முன்பாகவே வாழைத்தார்கள் எடுத்துச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி பின்பு வாழைத்தாருக்கும் சேர்த்து காவல் துறையினர் பாதுகாப்பு அளித்தனர்.
பின்பு கூட்டம் நிறைவடைந்து உதயநிதி ஸ்டாலின் புறப்பட்டுச் சென்ற உடனே வாழத்தார்களுக்கு பாதுகாப்பளித்த தொண்டர்கள், ஒருவருக்கொருவர் முந்தியடித்துக்கொண்டு உருண்டு பிரண்டு வாழத்தார்களை எடுத்துச் சென்றனர். இதனால் கட்சி தொண்டர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையும் படிக்க || சட்டவிதிகளை மீறி வெளிநாட்டு நிதி பெற்ற பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் மீது விசாரணை!!!
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், காய்ச்சல் காரணமாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிக்க : 'லியோ' இசை வெளியீட்டு விழா ரத்து...!ஏமாற்றத்தில் ரசிகர்கள்!!
வரும் 30-ஆம் தேதி வரை கட்சி தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் அவரை நேரில் சந்திக்க வரவேண்டாம் என விசிக சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு திருமாவளவனிடம் நலம் விசாரித்துள்ளார்.